Saturday, May 06, 2006

ஜனநாயகத்தின் தூண்கள்

தேர்தல் வரும் பொழுதெல்லாம் நமக்கு இந்திய ஜனநாயகம் குறித்த விவாதங்களும், சந்தேகங்களும் வந்து விடும். தேர்தல் நேரம் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட்ட வேண்டிய ஜனநாயக மரபுகளுக்கு தேர்தல் காலங்களில் மட்டுமே விளம்பரம் கிடைக்கிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் ஒரு புறம் இருக்க, நம்முடைய ஜனநாயகம் சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கிறதா ? ஜனநாயகத்தின் நான்கு தூண்களான மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் போன்றவை சரியான வழியில் தான் இயங்கி கொண்டிருக்கிறதா ?

இது குறித்த அலசல் தான் மே மாத திசைகள் இதழின் சிறப்பு பகுதியில் அலசப்படுகிறது.

அதில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரை

Saturday, April 15, 2006

தேர்தல் - சன் டிவி - தினகரன்

இந்த தேர்தலில் சன் டிவி, குங்குமம், தினகரன் போன்ற மாறன் குடும்ப ஊடகங்களால் தங்களுடைய வியபார வாய்ப்புகளை பறி கொடுத்திருக்கிற குமுதம், தினமலர் போன்றவை திமுகவிற்கு எதிராக தொடுத்திருக்கும் ஊடக வன்முறை குறித்த எனது பார்வை

Thursday, April 13, 2006

கருத்துக் கணிப்புகள்

CNN-IBN-HINDU கருத்துக் கணிப்பு குறித்த எனது அலசல்

Thursday, April 06, 2006

தொகுதி அலசல் : பண்ருட்டி

பண்ருட்டி தொகுதியின் வெற்றி வாய்ப்புகள் குறித்த எனது அலசல்

Tuesday, April 04, 2006

என்னுடைய தேர்தல் கணிப்பு

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்புகள் வெளியிடும் அனைத்து பத்திரிக்கைகளும் அதிமுகவிற்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்க, திமுக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன். ஏன் அவ்வாறு கருதுகிறேன் என்பதற்கான எனது வாதங்களை இந்தப் பதிவில் கூறியிருக்கிறேன்

Saturday, April 01, 2006

கூட்டணி ஆட்சி

"திசைகள்" இதழில் கூட்டணி ஆட்சியை எப்படி அமைப்பது என்று மாலன் கூறியதற்கு எதிர்வினையாக நான் எழுதிய கட்டுரை. இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்த விதத்தையும், தமிழகத்தில் அது குறித்த சாத்தியங்களையும் அலசும் பதிவு

Friday, March 31, 2006

விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா ?

இந்த தேர்தலின் பரபரப்பான அம்சமாக விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிடுகிறார் ? பாமகவின் கோட்டையான விருத்தாசலத்தில் விஜயகாந்த் ஏன் போட்டியிட வேண்டும் ? அவருக்கு அங்கிருக்கும் வாய்ப்புகள் என்ன ? இது குறித்த எனது அலசல்

Wednesday, March 29, 2006

தமிழக கஜானாவிற்கு ஆபத்து

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 2ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி போன்றவை குறித்தும், தமிழக நிதி நிலை குறித்துமான எனது பழைய பதிவின் மீள்பதிவு

Monday, March 27, 2006

பண்ருட்டி

பண்ருட்டி பகுதி குறித்த எனது மலரும் நினைவுகள். தேர்தல் பதிவு அல்ல, ஆனால் கொஞ்சம் தேர்தல் வாசனை அடிக்கும்

Sunday, March 26, 2006

ஸ்டாலின் vs வைகோ - 1

திமுகவின் தலைமையை வைகோ கைப்பற்றப் போகிறாரா ? ஸ்டாலின் தக்க வைத்துக் கொள்ளப் போகிறாரா என்ற விவாதங்கள் குறித்த எனது பார்வை

Saturday, March 25, 2006

தொகுதி அலசல் : குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி தொகுதியின் நிலவரம் குறித்து இந்தப் பதிவில் அலசி இருக்கிறேன்

Thursday, March 09, 2006

தமிழக அரசியலில் கொள்கைகள்

தமிழக அரசியலில் கொள்கைகள் குறித்தான விவாதங்களில் வைக்கப்படும் பேதங்களைப் பற்றியும், ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பற்றியும், மக்களுக்கு கொள்கைகள் தேவையா என்பது குறித்துமான எனது பார்வை

இந்தப் பதிவில் பெரியாரைப் பற்றிய சில விவாதங்களும் உண்டு

Sunday, March 05, 2006

3வது பெரிய கட்சி : மதிமுகவா ? பாமகவா ?

தமிழகத்தின் 3வது பெரிய கட்சி குறித்த அலசல்

Saturday, March 04, 2006

திமுகவிற்கு தோல்வியா ?

வைகோ திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்தும் அது திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பது குறித்துமான எனது பார்வை

இந்தப் பதிவில் சங்கரபாண்டி (சுடலை மாடன்), சுந்தரமூர்த்தி, நற்கீரன் போன்றவர்களின் சிந்தனையை தூண்டும் பின்னூட்டங்களும் உள்ளன

Friday, February 24, 2006

இரட்டை இலை

இரட்டை இலை சின்னம் குறித்தும், எம்.ஜி.ஆர் குறித்தும் என்னுடைய Short comment

இந்தப் பதிவில் மாலன் அவர்கள் எம்.ஜி.ஆர் குறித்து ஒரு அருமையான பின்னூட்டத்தை எழுதியிருக்கிறார்

Sunday, February 19, 2006

இரு நடிகர்கள்

தமிழக தேர்தல் களத்தில் இருக்கும் இரு நடிகர்களான விஜயகாந்த், கார்த்திக் ஆகியோரின் தேர்தல் வாய்ப்புகள் குறித்த எனது பதிவு.

Saturday, February 18, 2006

வைகோவின் எதிர்காலம்

வைகோ, கூட்டணி குறித்த தடுமாற்றத்தில் இருந்த பொழுது எழுதியப் பதிவு. வைகோவிற்கு எந்தக் கூட்டணியில் எதிர்காலம் இருக்கிறது என்பது குறித்தும், அவரது கடந்த கால அரசியல் தடுமாற்றம் குறித்தும் இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.

இதற்கு பின்னூட்டமிட்ட சுந்தரமூர்த்தியின் மாறுபட்ட கோணமும் இந்தப் பதிவில் உண்டு

Saturday, February 11, 2006

கலைஞர் அரசியலில் இருந்து விலக வேண்டும்

கலைஞர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று நான் கடந்த ஆண்டு (2005) எழுதியப் பதிவு

தேர்தலுக்காக எழுதப்பட்ட பதிவு அல்ல. ஆனால் தேர்தல் நேரத்தில் சுவாரசியமாக படிக்கப்படும் என்பதால் மீள்பதிவு செய்தேன்

Friday, February 03, 2006

ஊடகங்களின் பங்களிப்பு

தமிழக, இந்திய ஊடகங்கள் தேர்தலின் பொழுது எந்தளவுக்கு பணியாற்றுகின்றன, மக்களின் உணர்வுகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கின்றன என்பது குறித்த எனது கருத்துக்களை உள்ளடக்கியப் பதிவு

Tuesday, January 31, 2006

பாட்டாளி மக்கள் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சியின் சில உருப்படியான நடவடிக்கைகள் குறித்தும், அந்தக் கட்சியின் பலம் குறித்தும் எனது பார்வை

Saturday, January 21, 2006

அள்ளிக் கொடுக்கும் ஜெ

தேர்தல் பொருட்டு ஜெயலலிதா அள்ளிக் கொடுக்கும் சலுகைகள் குறித்தும் அது எவ்வாறு தமிழகத்தின் நிதி நிலைமையை சீர்குலைக்கும் என்பது குறித்தும் எனது பார்வை